ஐசிசி தொடர்கள் முதல் ஆசிய விளையாட்டு போட்டிகள் வரை.. 2026ல் இந்திய கிரிக்கெட் அணியின் போட்டிகள்..!
2026-ஆம் ஆண்டு இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு சவால்கள் நிறைந்த ஒரு ஆண்டாக அமையவுள்ளது. ஐசிசி தொடர்கள் முதல் ஆசிய விளையாட்டு போட்டிகள் வரை பல்வேறு முக்கிய தொடர்களில் இந்திய அணி பங்கேற்கிறது.
ஆண்டின் தொடக்கத்தில் நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
இதனை தொடர்ந்து, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்தும் 10-வது டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறவுள்ளது.
மார்ச் முதல் மே வரை ஐபிஎல் 2026 திருவிழா நடைபெறும்.
அதன் பிறகு, ஜூன் மாதம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராகவும், ஜூலையில் இங்கிலாந்தில் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும் இந்தியா விளையாடுகிறது.
ஆகஸ்ட் மாதம் இலங்கை சுற்றுப்பயணத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளுக்கான போட்டிகள் நடைபெறவுள்ளன.
செப்டம்பரில் வங்கதேச தொடரும், ஜப்பானில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிகளும் முக்கியத்துவம் பெறுகின்றன.
ஆண்டின் இறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியா வருவதோடு, இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. டிசம்பர் மாதம் இலங்கைக்கு எதிரான தொடருடன் பரபரப்பான 2026ஆம் ஆண்டு நிறைவடைகிறது.
இந்திய கிரிக்கெட் 2026, டீம் இந்தியா அட்டவணை, டி20 உலகக்கோப்பை 2026, ஐபிஎல் 2026, ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026, கிரிக்கெட் செய்திகள், விக்சித் பாரத் கிரிக்கெட்.
Edited by Siva
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


