வித் லவ் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின்மூலம் பிரபலமானவர் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த். தற்போது வித் லவ் படம்மூலம் இவர் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இதில் ஜீவிந்த்க்கு ஜோடியாக அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார்.
இப்படத்தை டூரிஸ்ட் ஃபேமிலி, லவ்வர் படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன் இயக்கியுள்ளார். MRP என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் டீசர், முதல் பாடல் எல்லாம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி படம் பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு படக்குழு தெரிவித்துள்ளது.
#WithLove will make you smile, laugh, and feel truly loved. After watching the final film, I felt happy and fulfilled, knowing our efforts resulted in something meaningful. I believe its going to be a special film for everyone.
— Abishan Jeevinth (@Abishanjeevinth) January 1, 2026
Happy New Year, everyone ? See you all soon in… pic.twitter.com/SvMSjisg8J
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


