மகரவிளக்கு திருவிழாவிற்காக சபரிமலை கோவில் திறப்பு.. ஜனவரி 20-ஆம் தேதி நடை அடைக்கப்படும்..!
மண்டல பூஜை நிறைவடைந்து சில நாட்கள் இடைவேளைக்கு பிறகு, புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் வருடாந்திர மகரவிளக்கு திருவிழாவிற்காக நேற்று மாலை மீண்டும் திறக்கப்பட்டது.
இந்த மகரவிளக்கு காலத்தின் மிக முக்கியமான நிகழ்வான மகரஜோதி தரிசனம் வரும் ஜனவரி 14-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அன்று மாலை பந்தளம் அரண்மனையிலிருந்து கொண்டு வரப்படும் புனிதமான திருவாபரணங்கள் சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு மகா தீபாராதனை நடைபெறும்.
ஜனவரி 19-ஆம் தேதி இரவு 11 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். ஜனவரி 20-ஆம் தேதி காலை பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதியின் தரிசனத்திற்குப் பிறகு, முறைப்படி கோயில் நடை அடைக்கப்படும்.
மகரஜோதியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும் அடிப்படை வசதிகளை உறுதி செய்யவும் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
Edited by Mahendran
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

