சூர்யகுமார் யாதவ் எனக்கு அடிக்கடி மெசேஜ் அனுப்பி தொல்லை தருகிறார்.. நடிகையின் குற்றச்சாட்டால் பரபரப்பு..!
இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் குறித்து பாலிவுட் நடிகை குஷி முகர்ஜி தெரிவித்துள்ள கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளன.
தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் குஷி முகர்ஜி, சமீபத்திய பேட்டி ஒன்றில் சூர்யகுமார் யாதவ் தனக்கு அடிக்கடி குறுஞ்செய்திகளை அனுப்புவார் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
"நான் எந்த கிரிக்கெட் வீரரையும் டேட்டிங் செய்ய விரும்பவில்லை. பல வீரர்கள் என்னிடம் பேசுகிறார்கள். சூர்யகுமார் யாதவ் எனக்கு அதிகமான மெசேஜ்களை அனுப்புவார்; ஆனால் தற்போது அவர் பேசுவதில்லை" என்று குஷி முகர்ஜி அந்தப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தி காட்டுத்தீயாக பரவியதை தொடர்ந்து, இது குறித்து விளக்கம் அளித்துள்ள நடிகை, தங்களுக்கிடையே எந்தவிதமான காதல் உறவும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
தற்போது சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கில் சற்று ஃபார்ம் அவுட்டில் இருக்கும் நிலையில், அவர் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். பிப்ரவரி 7 முதல் தொடங்கவுள்ள உலகக்கோப்பைத் தொடருக்குத் தயாராகி வரும் வேளையில், இத்தகைய சர்ச்சைகள் அவர் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன.
Edited by Mahendran
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


