75 பந்துகளில் 157 ரன்கள் எடுத்த சர்பராஸ் கான்.. சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சி..!
sarfaraz khan
ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரின் எலைட் குரூப் சி போட்டியில், கோவா அணிக்கு எதிராக மும்பை நட்சத்திர வீரர் சர்பராஸ் கான் வாணவேடிக்கை நிகழ்த்தியுள்ளார். இந்த போட்டியில், வெறும் 75 பந்துகளில் 157 ரன்கள் குவித்து ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் அதிர வைத்துள்ளார். அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் லலித் யாதவ் போன்ற வீரர்களை உள்ளடக்கிய கோவா அணியின் பந்துவீச்சை அவர் சிதறடித்தார்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்த பிறகு 4-வது வரிசையில் களம் புகுந்த சர்பராஸ், ஆரம்பம் முதலே அதிரடியை தொடங்கினார். இவரது இன்னிங்ஸில் 9 பவுண்டரிகளும், 14 பிரம்மாண்ட சிக்ஸர்களும் அடங்கும். வெறும் 56 பந்துகளில் சதமடித்த அவர், 72-வது பந்தில் 150 ரன்களை கடந்தார். சர்பராஸின் இந்த அசுரவேக ஆட்டத்தால் மும்பை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 444 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது.
சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026 ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்ட சர்பராஸ் கான், தற்போது சையத் முஷ்டாக் அலி மற்றும் விஜய் ஹசாரே தொடர்களில் அடுத்தடுத்து ரன்களைக் குவித்து தனது சிறப்பான ஃபார்மை நிரூபித்து வருகிறார். இவரது இந்த அதிரடி ஆட்டம் சிஎஸ்கே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


