டெஃப் ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்றார் அனுயா பிரசாத்

புதுடெல்லி: ஜப்பானின் டோக்கியோ நகரில் டெஃப் ஒலிம்பிக்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் அனுயா பிரசாத் 241.1 புள்ளிகளுடன் உலக சாதனை படைத்து தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனையான பிரஞ்சலி பிரசாந்த் துமல் 236.8 புள்ளிகளுடன் 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றார். ஈரானின் மஹ்லா வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.