BB Tamil 9 Day 71: கம்மு - பாரு சண்டை; சாண்ட்ரா அழுகைக்கு இல்லையா சார் எண்டு!

‘வீட்டு தல’யாகியிருக்கும் வினோத்தை முதல் நாளிலேயே பாரு அல்லாட விடுகிறார். அதிலும் பாரு + சான்ட்ரா கூட்டணி அபாயகரமான காம்பினேஷன்.

ரொமான்ஸ் பறவைகளாக திரிந்து கொண்டிருந்த பாருவிற்கும் கம்முவிற்கும் இடையில் ஹனிமூன் காலம் முடிந்து சண்டை ஏற்படத் தொடங்கியிருப்பது நல்ல அடையாளம். 

BB Tamil 9 Day 71 Review

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 71

மெயின் கேட்டிற்கு அருகே அமர்ந்திருந்த சான்ட்ரா ‘வெளியே போயிடணும் போல இருக்கு’ என்று சொல்ல ‘அப்படில்லாம் செஞ்சிராத’ என்று பாவனையாக பதறினார் அமித். (சீக்கிரம் கிளம்பும்மா முடியல என்பது அமித்தின் மைண்ட் வாய்ஸாக இருக்கலாம்!). 

“போகறதா இருந்தா அன்னிக்கே போயிருக்க மாட்டனா?” என்று பிரஜின் எவிக்ட் ஆன நாளை நினைவுப்படுத்திச் சொன்னார். எனில் அன்று அத்தனை ஆவேசமாக வெளியேறியது அத்தனையும் நடிப்பா கோப்பால்?! 

‘ஒருத்தர்கிட்ட நின்னு பேசுங்க. போயிடாதீங்க’ என்று அமித் அடுத்த அவசியமான உபதேசத்தைச் சொல்ல “சண்டை வலிக்கறவங்க கிட்ட நின்னு என்ன பேசறது.. சேது அண்ணா அன்னிக்கே சொன்னாரு.. கூட இருக்கறவங்க உங்களை வெச்சு விளையாடறாங்கன்னு. அப்ப புரியல. இப்ப புரியல” என்று அனத்தினார் சான்ட்ரா. 

விசே சர்காஸமாக சொன்னது பாருவை. பாரு இருக்கும் இடத்தில்தான் கலகமும் குழப்பமும் நேரும். ஆனால் திவ்யா மீதுள்ள பகைமை காரணமாக, அவரைத்தான் விசே சொன்னார் என்று சான்ட்ராவிற்குத் தோன்றுகிறது. 

வீட்டு ‘தல’ ஆன வினோத் - ஆரம்பத்திலேயே அலப்பறை செய்த பாரு

மளிகைப் பொருட்களோடு, பால், தயிர், முட்டை போன்ற பொருட்கள் வந்திருந்ததால் மக்கள் ஹேப்பி. “நான் திருந்திட்டேன்.. தப்பை உணர்ந்துட்டேன். இனிமே மைக்கை மறைக்கமாட்டேன்” என்று கத்திக் கொண்டிருந்தார் பாரு. (நாதஸ் திருந்திட்டான்.. யாரு சொன்னா.. அவனேதான்!) 

பதினோராவது வாரம் துவங்கியதற்கு போட்டியாளர்களுக்கு வாழ்த்து சொன்னார் பிக் பாஸ். (இத்தனை காலம் சகித்துக் கொண்டிருக்கிற பார்வையாளர்களுக்குத்தான் முதலில் சொல்லியிருக்க வேண்டும்!). 

கடந்த வாரத்தில் சிறந்த போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அதனால் ‘தல’ போட்டியில் யார் இருப்பார் என்பதும் தெரியவில்லை. ஏதாவது ஒரு டிவிஸ்ட் இருக்கும் என்று எதிர்பார்த்தோம். அதை இப்போது உடைத்தார் பிக் பாஸ். 

BB Tamil 9 Day 71 Review
BB Tamil 9 Day 71 Review

கோர்ட் டாஸ்க்கில் வழக்கை வென்றவர்கள் அனைவரும் தல போட்டிக்கு தகுதியானவர்களாம். ஒரு வழக்கு வெற்றி பெற வேண்டுமென்றால் திறமையான வழக்கறிஞர்தான் முக்கியம். எனவே கோர்ட் டாஸ்க்கில் சிறப்பாக செயல்பட்டவர்களை தேர்ந்தெடுத்து அவர்களை ‘தல’ போட்டிக்கு தகுதியாக்குவதுதான் முறையானது. (உங்க கேம். உங்க உருட்டு!)

இதன்படி அமித், வினோத், ஆதிரை, பாரு, சுபிக்ஷா, அரோ ஆகியவர்கள் களத்தில் இறங்கினார்கள். ‘தள்ளு.. தள்ளு.. அள்ளு.. அள்ளு’ என்கிற பெயர் கொண்ட இந்தப் போட்டியில் உதவியாளர் உதவியுடன் ஸ்கேட் செய்து பந்துகளை பெட்டியில் சேகரிக்கவேண்டும். 

‘எனக்கு கம்முதான் வேண்டும்’ - அடம்பிடித்த பாரு

ஆளாளுக்கு ஒரு உதவியாளர் பெயரைச் சொல்ல, கம்முவைத் தேர்ந்தெடுக்க பலத்த போட்டி. வினோத் முதலில் கம்முவின் பெயரைச் சொல்லிவிட ‘எனக்கும் கம்முதான் வேணும்’ என்று அடம்பிடித்தார் பாரு. ‘ஒருவேளை தோத்துச்சின்னா.. இந்த அம்மா வம்பிழுக்கும்’ என்று கம்மு நினைத்தாரோ, என்னமோ.. ‘நான் வினோத் கூட இருக்கேன்..’ என்று எஸ்கேப் ஆனார். 

அழுமுஞ்சி சான்ட்ராவை யாரும் சீந்தவில்லை. எனவே அவரை நடுவராக நியமித்தார் பிக் பாஸ். ‘வாடி வெச்சுக்கறேன்’ என்று ரிவேன்ஜ் மோடை ஆன் செய்தார் சான்ட்ரா. 

BB Tamil 9 Day 71 Review
BB Tamil 9 Day 71 Review

உதவியாளர் காலைப் பிடித்து உந்தித்தள்ள, அதன் மூலம் படுத்துக்கொண்டே நகர்ந்த போட்டியாளர்கள், பந்துகளை பெட்டிக்குள் சேகரித்தார்கள். கடந்த வாரத்தில் ‘தல’ போட்டி ஜாலியாக நடந்து முடிந்தது. ஏனெனில் அதில் பாரு இல்லை. ஆனால் இந்த முறை ஒரு சர்ச்சை. காரணம் யாரு? வேறு யாரு.. பாருதான். 

பந்துகளை எண்ணும்போது ஓரமாக கிடந்த ஒரு பந்தை நடுவர் சான்ட்ரா தள்ளி விட்டு விட “அது என்னோட பந்துதான்” என்று அடம்பிடித்தார் பாரு. ஆனால் கூட இருந்த கம்முவோ “இல்லை.. அது ஓரமா இருந்த பந்து” என்று சாட்சியம் சொல்ல பாருவிற்கு கோபம் வந்துவிட்டது. 

இத்தனைக்கும் அந்த பந்தை சேர்த்திருந்தால்கூட பாரு வென்றிருக்க முடியாது. ஏனெனில் வெற்றி பெற்ற வினோத் அதையும் விட அதிகமான பந்துகளை சேகரித்திருந்தார். ஆனாலும் “நான் எப்பவுமே உன் கூட நின்னிருக்கேன்.. நீ எப்பவுமே என்னை கை விட்டுடறே” என்று கத்தி சண்டை போட்டார் பாரு. “நான் நியாயத்தைத்தான் சொல்ல முடியும்.. அதுக்குத்தான் சொன்னேன். உன் கேமை நீ ஆடு.. தனித்தனியா ஆடலாம்” என்று கோபித்துக் கொண்டு விலகினார் கம்மு. (இப்படியாக பாரு - கம்மு முதல் சண்டை மங்கலகரமாக ஆரம்பித்திருக்கிறது!)


பாரு சர்ச்சை செய்தாலும் கூட ‘இதுதான் விதிகளின்படி நடந்து முடிந்த முதல் டாஸ்க்’ என்று அறிவிப்பு செய்து மகிழ்ந்தார் பிக் பாஸ். அதுதான் பாருவிற்கான பதில் போல. 

BB Tamil 9 Day 71 Review
BB Tamil 9 Day 71 Review

‘வேலை செய்ய மாட்டோம் - பாரு + சான்ட்ரா பிடிவாதம்

ஆக.. வினோத் இந்த வாரத்தின் ‘தல’. பாரு வெற்றி பெற்று ‘தல’யாகி இருந்தால் இன்னமும் சுவாரசியமாக இருந்திருக்கும். வேலை செய்யாமல் ஒருவர் டபாய்த்தால் எத்தனை கடுப்பு வரும் என்பது புரிந்திருக்கும். 

பதவியை ஏற்றுக் கொண்ட வினோத்திடம் “வீடு சுத்தமா இருக்கும்படி பார்த்துக்கங்க” என்றார் பிக் பாஸ். பலமாக தலையை ஆட்டினார் வினோத். ஆனால் அதுதான் அவருக்கு பெரிய ஆப்பாக வரப்போகிறது என்பது அப்போது அவருக்குத் தெரியாது. 

அணி பிரிக்கும்போது, அரோவை முதன் முறையாக கிச்சன் டீமில் சேர்த்து சாதனை ஏற்படுத்தினார் வினோத். க்ளீனீங் டீம் பிரிக்கும்போது பிரச்சினை. ஏனெனில் அதில் பாருவும் சான்ட்ராவும் இருந்தார்கள். இது பற்றிய விவாதம் ஏற்படும்போது “ஒருத்தர் பேசும்போது குறுக்கே பேசாதீங்க. ஓவர்லாப் ஆகும்” என்றார் பாரு. (இதை யார் சொல்வது.. சாத்தான் வேதம் ஓதுவது போலவே இருக்கிறது!). “சும்மா இருடா. கொஞ்ச நேரம்” என்று அமித் மீது பாய்ந்து காய்ச்சினார் பாரு. 

கிச்சன் ஏரியாவை சுத்தம் செய்வது தொடர்பாக ஒரு சண்டை எழுந்தது. இதுநாள் கிச்சன் சுற்றுப்புறங்களை இரவில் மட்டும்தான் க்ளீனிங் டீம் சுத்தம் செய்து வந்த பழக்கம் போலிருக்கிறது.

BB Tamil 9 Day 71 Review
BB Tamil 9 Day 71 Review

ஆனால் பிக் பாஸ் உத்தரவிட்ட காரணத்தினால் ஒவ்வொரு வேளையும் சுத்தம் செய்ய வேண்டும் என்று வினோத் சொன்னதற்கு பாருவும் சான்ட்ராவும் மறுப்பு தெரிவித்தனர். “அதை கிச்சன் டீம்தான் பண்ணனும்.. அதுதான் வீட்டு வழக்கம். அதுல அஞ்சு பேரு இருக்காங்க” என்று ஆட்சேபித்தனர்.

கிச்சன் டீம் இதை மறுக்க “ஏம்மா.. வீடு சுத்தமா இருக்கறது முக்கியமா.. இல்லையா?” என்று பாருவிடம் வினோத் மல்லுக்கட்டினார். இது தொடர்பாக சண்டை தொடர “ஒரு எழவும் கேட்க மாட்டேங்குது. சும்மா இருங்க” என்று தலையைப் பிடித்துக்கொண்டு ஹைடெஸிபலில் கத்தினார் எஃப்ஜே. 

பாத்ரூம் அணிக்கு வேலை குறைவு என்பதால் ‘நாங்க வேணா க்ளீனிங் டீமிற்கு ஹெல்ப் பண்றோம். லிவ்விங் ஏரியாவை தினமும் சுத்தப்படுத்தறோம்” என்றார் விக்ரம். உதவிக்கு வந்தவனுக்கு யாராவது உபத்திரவம் செய்வார்களா? பாருவும் சான்ட்ராவும் செய்வார்கள். “நாங்க சொல்றபடிதான் ஹெல்ப் பண்ணணும்.” என்று அவர்கள் அழிச்சாட்டியம் செய்ய “எந்த ஊரு நியாயம் இது?” என்று விக்ரம் சிரித்தார்.

 “மக்களே.. எங்களுக்கு நடக்கும் அநியாயத்தை கேட்க மாட்டீங்களா.. எங்க வேலையைக் கெடுக்கவே வந்திருக்காங்க” என்று லாஜிக்கே இல்லாமல் புலம்பினார் பாரு. “ஏம்மா.. அவங்க ஹெல்ப் பண்ண வந்தவங்க. அவங்க கிட்ட தகராறு பண்ணா எப்படி?” என்று பாருவை சமாதானப்படுத்தியே நொந்து போனார் வினோத். 

BB Tamil 9 Day 71 Review
BB Tamil 9 Day 71 Review

“நான் நியாயத்தின் பக்கம்தான் நிப்பேன்” - கம்முவின் திடீர் ஞானோதயம்

பாருவிற்கும் கம்முவிற்கும் சண்டையின் தொடர்ச்சி ஆரம்பித்தது. “நான் உனக்காக நின்னிருக்கேன். நீ எனக்காக நிக்கலை. சான்ட்ரா கூட அப்பவே சொன்னா.. கம்முவை நம்பாதேன்னு’ என்று பாரு ஆரம்பிக்க “யாரு சான்ட்ரா.. அப்ப அவ கூடயே போ.. என் கிட்ட வராத. வினோத் கூடத்தான் என் கிட்ட சொன்னான். தனியா கேம் ஆடுன்னு.. நான் அதை வெளில சொல்லிட்டா இருக்கேன்” என்று எரிச்சலானார் கம்மு. 

கிச்சன் ஏரியா அருகே சிறிய பகுதியில் இருந்த குப்பைகளை அகற்ற சான்ட்ரா மறுத்துவிட்டார். மொத்தமாக இரவுதான் செய்வாராம். இப்போது உடல் நிலை சரியில்லையாம். “ஏம்மா.. கொஞ்சம்தானே இருக்கு. பண்ணிடுங்கம்மா” என்று வினோத் கெஞ்ச, வேறு வழியில்லாமல் சலித்துக்கொண்டே செய்தார் பாரு.  இதே சான்ட்ராதான் முன்னர் பூண்டு தோலை உரித்து வீடு முழுக்க பரவவிட்டவர். 

நாமினேஷன் பிராசஸ் ஆரம்பித்தது. எந்த இருவரை நாமினேட் செய்கிறோமோ அவரின் முகத்தில் பெயின்ட்டை பூச வேண்டும். “சொன்னவுடனே வேலை செஞ்சா ஈஸியா முடியும். ஆனா அதை ஊதி பெருசாக்குறாங்க” என்று பாருவை நாமினேட் செய்தார் வினோத். 

சான்ட்ராவிற்கு அதிக வாக்குகள் கிடைத்தன. யாரிடமும் முகம் கொடுத்து பேசாமல் இருப்பது, தனியாக அமர்ந்து அழுவது, ஆத்திரப்பட்டு அனைவரையும் கத்துவது போன்ற காரணங்கள் சொல்லப்படும் போது இறுக்கமான ரோபோ முகத்துடன் இருந்தார் சான்ட்ரா. எஃப்ஜேவிற்கும் கம்முவிற்கும் அவர்களின் முன்கோபம், ஆட்சேபகரமான வார்த்தைகள் காரணமாக சொல்லப்பட்டன. ஆதிரையை எஃப்ஜே அவதூறாகப் பேசியதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார் விக்ரம். 

BB Tamil 9 Day 71 Review
BB Tamil 9 Day 71 Review


“விக்ரம் தப்பிச்சிட்டானே” - பாரு வயிற்றெரிச்சல் 

கனியையும் அரோவையும் நாமினேட் செய்து பழிவாங்கினார் பாரு. கம்ருதீனை நாமினேட் செய்த சான்ட்ரா, “திவ்யாவைத் திட்டும்போது பேச முடியாம போச்சு. அதற்காக இப்போது நாமினேட் பண்றேன்” என்று நல்ல பிள்ளையாக சீன் போட்டார். (ஹோஸ்ட் அறிவுறுத்தியதால் இந்த நாடகம்!)

ஆக.. இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள், சான்ட்ரா, அமித், எஃப்ஜே, கம்ருதீன், அரோரா, ஆதிரை, திவ்யா, சுபிக்ஷா, சபரி, கனி மற்றும் பாரு. தன்னுடைய பெயர் வராது என்று நினைத்திருந்த பாருவிற்கு கடைசியில் ஆப்பு வைத்தார் பாரு.  இந்த வாரம் எஸ்கேப் ஆனவர் விக்ரம் மட்டுமே. 


“விக்ரம் எப்படி தப்பிச்சான்னு தெரியலையே… போச்சே.. போச்சே.. நான் ரெண்டு பேரை டார்கெட் பண்ணேன்.. அதனால விட்டுட்டேன். வேற யாராவது பண்ணுவாங்கன்னு நெனச்சே.. போச்சே. போச்சே.. விக்ரமை நாமினேட் பண்ண எனக்கு காரணங்கள் இருக்கு. ஆதிரை கேஸை சீக்கிரமா முடிச்சது” என்று பாரு புலம்ப “நாமினேட் ஆனாலும் எனக்கு கவலை இல்லை. ஆனா நீ காண்டாவுற பார்த்தியா.. அதைப் பார்க்க சந்தோஷமா இருக்கு “ என்று கூலாகச் சொன்னார் விக்ரம். 

சான்ட்ராவின் அடுத்த அழுகை டிராமா - புரியாத புதிர்

சான்ட்ராவின் அடுத்த டிராமா ஆரம்பித்தது. “அவங்க அவங்க காஃபி கப்பை உடனே கழுவி வெச்சிடுங்க. கிச்சன் ஏரியால வெக்காதீங்க.. எனக்கு அந்த ஏரியா சுத்தமா இருக்கணும்” என்று அணி பிரிக்கும் போதே அறிவித்தார் கனி. 

ஆனால் சான்ட்ராவோ தனது கோப்பையை கழுவாமல் வைத்துவிட்டு போய் விட்டார்.  இது பற்றி வினோத் சுட்டிக் காட்டினார். கனியும் சான்ட்ராவிடம் சொன்னார். ஆனால் கனியின் முகத்தைப் பார்க்காமலேயே கோப்பையைக் கழுவி விட்டு அகன்றார் சான்ட்ரா. 

BB Tamil 9 Day 71 Review
BB Tamil 9 Day 71 Review

இதனால் கனிக்கு கோபம் வந்தது. “நான் பேசறதை பார்க்கக்கூட பிடிக்கலை. ஏன் இப்படி மத்தவங்க மேல கோபம்.. மூஞ்சை கூட பார்க்காத அளவிற்கு என்ன ஆயிடுச்சு.. ச்சீ” என்று கனி புலம்பினார். 

‘ச்சீ’ என்று சொன்னது சான்ட்ராவிற்கு வருத்தத்தை ஏற்படுத்தி விட்டது. சாப்பாட்டு தட்டை தூக்கிக்கொண்டு மெயின் கேட்டிற்கு அருகில் அமர்ந்து வழக்கம் போல் ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டார். அருகில் வந்த சுபிக்ஷா “அவங்க முகத்தை கூட நீங்க பார்க்கலையாம். என்னதிதுன்னு கேட்கறாங்க” என்று சொல்ல “அவங்களுக்கு ஏன் நான் பதில் சொல்லணும். கேப்டன் சொன்னதால அவர் கிட்ட பேசினேன். அதுக்கு என்னவாம். இவங்களுக்கு மனச்சாட்சியே இல்லையா.. எப்படில்லாம் சீப் லேங்வேஜ் பேசறாங்க..? என்று அழ ஆரம்பித்து விட்டார் சான்ட்ரா. 

‘ச்சீ.. என்பது சீப்பான வார்த்தையாம். எனில் இதே சான்ட்ரா எத்தகைய வார்த்தைகளை எல்லாம் இறைத்திருக்கிறார்? விக்ரமை எப்படியெல்லாம் அவமானப்படுத்தியிருக்கிறார்?.. எஃப்ஜேவின் குடும்பத்தை கடுமையாகப் பேசிய பிரஜினின் கூட நின்று பின்பாட்டு பாடியிருக்கிறார்?

“இது ஒரு கேம்மா. பிடிக்காதவங்க இருந்தாலும் சமயத்துல பேசித்தான் ஆகணும்.. எல்லார் மேலயும் கோபத்தைக் காண்பிக்காதீங்க” என்று சமாதானப்படுத்தினார் வினோத். 

BB Tamil 9 Day 71 Review
BB Tamil 9 Day 71 Review

சான்ட்ராவிற்கு என்னதான் பிரச்சினை? கணவர் பிரஜின் வெளியே போனதா, திவ்யா மீது கோபமா.. ஏன் எல்லோரின் மீதும் எரிந்து விழுகிறார்..” என்பதற்கான காரணங்கள் தெரியாமல் மர்மப் பெண்ணாக இருக்கிறார். 


பிரஜின் சட்டையை தூக்கிக்கொண்டு அலைவது, அதிலேயே மூக்கைச் சிந்தி துடைப்பது, திவ்யா பற்றி சந்தேகத்துடன் புறணி பேசுவது, காரணம் கேட்டால் எரிந்து விழுவது, எல்லோரிட&#

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.