Lokesh: கூலி ரிலீஸுக்குப் பிறகு நான் எந்தப் பேட்டியும் கொடுக்காததுக்குக் காரணம் - லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் நடத்தும் மார்கழியில் மக்களிசை நிகழ்வு நேற்றைய தினம் தொடங்கியது.

6வது முறையாகத் தொடர்ந்து நடைபெறும் இந்த நிகழ்வை கனிமொழி எம்.பி., இயக்குநர்கள் வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் ஆகியோர் பறையடித்துத் தொடங்கி வைத்தனர்.

Margazhiyil Makkalisai 2025

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

லோகேஷ் கனகராஜ் பேசுகையில், "எனக்கு மாநகரம் பட சமயத்திலிருந்து ரஞ்சித் அண்ணாவைத் தெரியும். அவருடைய செயல்களில் என்னுடைய பங்களிப்பும் இருக்கணும்னு ஆசைப்படுறேன்.

மாற்றங்கள் நம்மிடம் இருந்துதான் பிறக்கும். நான் சிந்திச்சு செயல்பட்டாலே போதும்னு நான் நினைக்கிறேன். கூலி படத்தை முடிச்சதுக்குப் பிறகு என்னுடைய பேட்டிகள் எதுவும் வரவில்லை.

காரணம் அப்போது என்னுடைய அடுத்த பட வேலைகளில் இறங்கிவிட்டேன். எனக்கும் மக்களுக்கு நன்றி தெரிவிக்க சரியான மேடை கிடைக்கல.

Lokesh Kanagaraj - Margazhiyil Makkalisai
Lokesh Kanagaraj - Margazhiyil Makkalisai

கூலி படத்தின் மீது ஆயிரம் விமர்சனங்கள் வந்தன. மக்களுக்குப் படத்தைக் கொடுக்கும்போது அவங்க கொடுக்கிற விமர்சனத்தை ஏத்துக்கணும்.

நானும் அந்த விமர்சனங்களை ஏத்துக்கிட்டு, அடுத்து வர்ற என்னுடைய படங்களில் அதைத் தவிர்க்க முயற்சி பண்ணுவேன்.

விமர்சனங்களைத் தாண்டி ரஜினி சாருக்காகவும், இப்படியான ஒரு படத்துக்காகவும் மக்கள் தியேட்டரில் போய் படத்தைப் பார்த்தாங்க. அந்தப் படம் 500 கோடி சம்பாதித்து இருப்பதாக தயாரிப்பாளர் சொன்னாங்க. இவை அத்தனைக்கும் காரணம் மக்களுடைய சப்போர்ட்தான்! அதுக்கு நன்றி!" எனப் பேசினார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.