Dharmendra: நடிகர் தர்மேந்திராவுக்கு என்ன ஆனது? - பரவும் வதந்தி; கொதித்த ஹேமா மாலினி, ஈஷா தியோல்

ஹீ மேன் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர் பாலிவுட் நடிகர் தர்மேந்திரா (89). 60 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் தடம் படித்த இவர் இறுதியாக நடித்தப்படம் இக்கிஸ். இந்த ஆண்டு இறுதியில் வெளியாகவிருக்கிறது.

பஞ்சாபின் லூதியானாவில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்த தர்மேந்திரா, 1954-ம் ஆண்டு தனது 19 வயதில் பிரகாஷ் கவுர் என்பவரை மணந்தார். அதன் பிறகுதான் திரைப்படத் துறையில் நுழைந்தார். அதன் பிறகுதான் நடிகை ஹேமா மாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

நடிகர் தர்மேந்திரா

மனைவி ஹேமா மாலினி, நடிகர்கள் சன்னி தியோல், பாபி தியோல், ஈஷா தியோல், அஹானா தியோல், அஜீதா மற்றும் விஜேதா என 6 பிள்ளைகளுடன் வசித்து வந்த தர்மேந்திரா, வயது முதிர்வு காரணமாக சில உடல்நலப் பிரச்னைகளை எதிர்க்கொண்டு வருகிறார்.

வயதான நிலையிலும் தொடர்ந்து சமூக ஊடகங்களில் தொடர்ந்து செயல்பட்டு வரும் நடிகர் தர்மேந்திரா, குறிப்பாக ஆரோக்கியமான வாழ்க்கை முறை, இயற்கை வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் வீடியோக்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.

இந்த நிலையில், நடிகர் தர்மேந்திராவுக்கு நேற்று திடீரென சுவாசக் கோளாறு காரணமாக மூச்சு விடுவதில் பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனால், மும்பையின் பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதற்கிடையில், நடிகர் தர்மேந்திரா சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாதக் செய்தி வெளியாகி பரபரப்பானது.

நடிகர் தர்மேந்திரா - நடிகை ஹேமா மாலினி
நடிகர் தர்மேந்திரா - நடிகை ஹேமா மாலினி

இந்த நிலையில்தான் நடிகர் தர்மேந்திராவின் மகள் ஈஷா தியோல் தன் சமூக ஊடகப் பக்கத்தில், ``ஊடகங்கள் அதி வேகத்தில் தவறான செய்திகளைப் பரப்புவது போல் தெரிகிறது. என் தந்தையின் உடல்நிலை சீராக இருக்கிறது. அவர் குணமடைந்து வருகிறார். எங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தனியுரிமையை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அப்பா விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்ததற்கு நன்றி," எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

"இப்போது நடப்பது மன்னிக்க முடியாதது! சிகிச்சையால் குணமடைந்து வரும் ஒருவரைப் பற்றி எவ்வாறு தவறான செய்திகளைப் பரப்ப முடியும்? இது மிகவும் அவமரியாதை மற்றும் பொறுப்பற்ற செயல். தயவுசெய்து குடும்பத்திற்கும் அதன் தனியுரிமைக்கான தேவைக்கும் உரிய மரியாதை கொடுங்கள்" என்று ஹேமா மாலினி ட்வீட் செய்துள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.