4 வேதங்களையும் பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும்: ஜோதிட முனைவர் கே.பி.​வித்யாதரன் வலியுறுத்தல்

திரு​வண்​ணா​மலை: நான்கு வேதங்​களை​யும் பாடத் திட்​டத்​தில் சேர்க்க வேண்​டும் என்று ஜோதிட முனை​வர் கே.பி.​வித்​யாதரன் கூறி​னார். திரு​வண்​ணா​மலை கிரிவலப் பாதை​யில் வேதாகம தேவார ஆன்​மிக கலாச்​சார மாநாடு நேற்று நிறைவடைந்​தது. இரண்டு நாட்​கள் நடை​பெற்ற இம்​மா​நாட்​டின் 2-வது நாளான நேற்று காலை 1,008 மகளிர் பங்​கேற்ற திரு​விளக்கு பூஜை, சுமங்​கலிப் பிரார்த்​தனை நடை​பெற்​றது.

அண்​ணா​மலை​யார் கோயில் இளவரசு பட்​டம் பி.டி.ரமேஷ் குருக்​கள் தலைமை வகித்​தார். சென்னை வேதாகம தேவார ஆன்மிக கலாச்சார அறக்கட்டளை நிர்வாகி ஸ்ரீஜெகதீஷ் கடவுள் முன்​னிலை வகித்​தார். சிறப்பு விருந்​தின​ராகப் பங்​கேற்ற காஞ்சி பீடா​திபதி ஸ்ரீசங்கர விஜயேந்​திர சரஸ்​வதி சங்​க​ராச்​சா​ரியா சுவாமிகள் திரு​விளக்கு பூஜையைத் தொடங்கி வைத்து அருளாசி வழங்​கி​னார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.