ஸ்ரீ சாரதா நவராத்திரி விழாவை முன்னிட்டு காஞ்சி மடத்தின் பீடாதிபதிகள் பட்டினப்பிரவேசம்

சென்னை: ஸ்ரீ சாரதா நவராத்​திரி விழாவை முன்​னிட்​டு, காஞ்சி சங்கர மடத்​தின் பீடா​திப​தி​கள் ஸ்ரீ விஜயேந்​திர சரஸ்​வதி சுவாமிகள், ஸ்ரீ சத்ய சந்​திரசேகரேந்​திர சரஸ்​வதி சுவாமிகள், நேற்று சென்​னைக்கு வருகை புரிந்​துள்​ளனர்.

ஸ்ரீ சாரதா நவராத்​திரி மஹோற்​சவம், செப். 22-ம் தேதி முதல் அக். 2-ம் தேதி வரை, சென்​னை, தாம்​பரம் கிழக்கு ராஜகீழ்ப்​பாக்​கத்​தில் உள்ள ஸ்ரீ காஞ்சி மகாஸ்​வாமி வித்யா மந்​திர் பள்ளிவளாகத்​தில் நடை​பெற உள்​ளது. இவ்​விழாவை முன்​னிட்டு காஞ்சி சங்கர மடத்​தின் பீடா​திப​தி​கள் ஸ்ரீ விஜயேந்​திர சரஸ்​வதி சுவாமிகள், ஸ்ரீ சத்ய சந்​திரசேகரேந்​திர சரஸ்​வதி சுவாமிகள், செப். 20-ம் தேதி (நேற்​று) இங்கு வருகை புரிந்​துள்​ளனர். இதையடுத்து செப். 21-ம் தேதி (இன்​று) மாலை 4.25 மணி அளவில் திவ்ய தேச கண்​காட்​சியை தொடங்கி வைக்க உள்​ளனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.