மகாளய அமாவாசையை முன்னிட்டு சென்னையில் கடற்கரை, கோயில் குளங்களில் ஏராளமானோர் தர்ப்பணம்
சென்னை: மகாளய அமாவாசையை முன்னிட்டு சென்னையில் கோயில் குளங்கள், மெரினா கடற்கரை உள்ளிட்ட நீர்நிலைகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்து, முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
அமாவாசை நாளில் விரதம் இருந்து தர்ப்பணம் கொடுத்தால் முன்னோரின் ஆசி கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இதில் ஆடி, புரட்டாசி, தை மாதங்களில் வரும் அமாவாசை நாள் விசேஷமானதாக கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக, புரட்டாசியில் வரும் அமாவாசை, மகாளய அமாவாசை எனப்படுகிறது. இதற்கு முந்தைய 15 நாட்களும், அதாவது, ஆவணி மாத பவுர்ணமிக்கு பிறகு வரும் பிரதமை தொடங்கி அடுத்து வரும் 15 நாட்களும் ‘மகாளய பட்சம்’ எனப்படுகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

