குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா கொடியேற்றம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி வேடமணிந்தனர்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் பிரசித்தி பெற்ற தசரா திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி வேடமணிந்தனர். முக்கிய நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் அக். 2-ம் தேதி நடைபெறுகிறது.
கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பல்லக்கில் கொடிப்பட்டம் வீதியுலா வந்து கோயிலை சேர்ந்தது. பின்னர், சன்னதிக்கு எதிரேயுள்ள கொடி மரத்தில் அதிகாலை 5.36 மணிக்கு ‘ஓம் காளி ஜெய் காளி’ என்ற பக்தி கோஷம் விண்ணைப் பிளக்க கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து, கொடி மரத்துக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

