திருமலையில் நாளை கருட சேவை: ஆண்டாள் சூடிய மாலை திருப்பதி புறப்பட்டது

ஸ்ரீவில்லிபுத்தூர்: ​திருப்​ப​தி​யில் நாளை நடை​பெறும் கருட சேவை​யின்​போது மலை​யப்ப சுவாமிக்கு அணி​விப்​ப​தற்​காக ஸ்ரீவில்லிபுத்​தூரிலிருந்து ஆண்​டாள் சூடிக் களைந்த மாலை, பட்டு வஸ்​திரம், கிளி உள்​ளிட்ட மங்​கலப் பொருட்​கள் நேற்று திருப்​ப​திக்கு அனுப்​பிவைக்​கப்​பட்​டன. ஸ்ரீவில்​லிபுத்​தூர் ஆண்​டாள் கோயி​லில் மூல​வர் வடபத்​ரசயனர் (பெரிய பெரு​மாள்) தினசரி பூஜை​யின்​போது ஆண்​டாள் சூடிய மாலையை அணிந்து பக்​தர்​களுக்கு அருள்​பாலிக்​கிறார்.

அதே​போல, மதுரை​யில் கள்​ளழகர் வைகை ஆற்​றில் இறங்​கும் சித்​திரை திரு​விழா, ஸ்ரீரங்​கம் ரங்​க​நாதர் சித்​திரைத் தேரோட்​டம், திருப்​பதி புரட்​டாசி பிரம்​மோற்சவ விழா​வில் கருட சேவை​யின்​போது பெரு​மாளுக்கு அணி​விப்​ப​தற்​காக ஸ்ரீவில்​லிபுத்​தூரில் இருந்து ஆண்​டாள் சூடிக் களைந்த பூமாலை, பட்டு வஸ்​திரம், கிளி உள்​ளிட்டவை அனுப்பி வைக்​கப்​படும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.