ஏழுமலையானுக்கு அனைவரும் சமம்: தேரின் உச்சியில் சவர தொழிலாளர்களின் தங்க குடையுடன் உலா

திருமலை: மனிதர்​களுக்கு தான் ஜாதி, மதம் பேதமெல்​லாம். கடவுளுக்கு கிடை​யாது. இதைத்​தான் திருப்​பதி ஏழு​மலை​யானுக்கு செய்​யும் கைங்​கர்​யங்​கள் நமக்கு போதிக்​கிறது. இன்று பிரம்​மோற்​சவத்​தில் காலை தேர்த்​திரு​விழா நடை​பெற உள்​ளது. இந்த தேரின் உச்​சி​யில் சவர தொழிலா​ளர்​கள் வழங்​கும் தங்க குடை​தான் அமைக்​கப்​படு​கிறது. அதன் கீழ்​தான் உற்சவ மூர்த்​தி​கள் தேரில் வலம் வந்து பக்​தர்​களுக்கு அருள்பாலித்து வரு​கின்​றனர்.

திருப்​பதி ஏழு​மலை​யான் கோயி​லில் நடை​பெறும் கைங்​கர்​யங்​களை உற்று நோக்​கி​னால், ஜாதி, மதம் என்​பது பெரு​மாளுக்கு கிடை​யாது என்​பதை நாம் நன்கு அறிய முடி​யும். பல ஆண்​டு​களாக திருப்​பதி ஏழு​மலை​யானுக்கு சுப்​ர​பாத சேவைக்கு முன், கோயில் திறந்​ததும் முதல் தரிசனம் யாதவ குலத்​தவர்​களுக்கு தான் வழங்​கப்​படு​கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.