சக்கர ஸ்நான நிகழ்வில் திரளான பக்தர்கள் புனித நீராடல்: திருப்பதி பிரம்மோற்சவம் நிறைவு
திருமலை: திருப்பதி பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான நேற்று காலை சக்கர ஸ்நான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடினர். மாலை பிரம்மோற்சவ கொடி இறக்க நிகழ்வு நடத்தப்பட்டது.
பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த செப்டம்பர் மாதம் 24-ம் தேதி மாலை கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அன்று மாலை ஆந்திர அரசு சார்பில் முதல்வர் சந்திரபாபு நாயுடு, சுவாமிக்கு பட்டு வஸ்திரத்தை காணிக்கையாக வழங்கினார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

