பழநி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா அக்.22-ம் தேதி தொடக்கம்
பழநி: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா வரும் 22-ம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்குகிறது. திண்டுக்கல் மாவட்டம் பழநி மலைக்கோயிலில் கந்தசஷ்டி விழா வரும் 22-ம் தேதி நண்பகல் 12 மணிக்கு உச்சிகாலத்தில் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 27-ம் தேதி மாலை நடைபெற உள்ளது.
அன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். மாலை 5.30 மணிக்கு நடக்கவேண்டிய சாயரட்சை பூஜை பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறும். பிற்பகல் 3 மணிக்கு சின்னக்குமாரசுவாமி அசுரர்களை வதம்புரியும் பொருட்டு, மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்குதல் நிகழ்ச்சியுடன் சந்நிதி அடைக்கப்படும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

