திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக்.22-ம் தேதி தொடக்கம்

தூத்துக்குடி: ​திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் பிரசித்தி பெற்ற கந்த சஷ்டி திரு​விழா வரும் 22-ம் தேதி தொடங்குகிறது. இதையொட்​டி, அன்று அதி​காலை 1 மணிக்கு நடை​திறக்​கப்​படு​கிறது. தொடர்ந்து பல்​வேறு பூஜைகள் நடத்தப்பட்டு, காலை 7 மணிக்கு யாக​சாலை பூஜை​யுடன் கந்​தசஷ்டி திரு​விழா தொடங்​கு​கிறது.

அன்று சுவாமி ஜெயந்​தி​நாதர் வள்​ளி-தெய்​வானை​யுடன் தங்​கச்​சப்​பரத்​தில் சண்​முகவி​லாச மண்​டபத்​துக்கு எழுந்​தருள்​கிறார். அங்​கிருந்து திரு​வாவடு​துறை ஆதீன சஷ்டி மண்​டபத்​துக்கு செல்​கிறார். அங்கு சுவாமி, அம்​மனுக்கு அபிஷேகம், அலங்​காரம் செய்​யப்​பட்ட பின்​னர், சுவாமி, அம்​மனுடன் தங்க ரதத்​தில் எழுந்​தருளி கிரி வீதி​யில் பவனி வந்து கோயில் சேர்​கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.