ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் மேற்கொண்டனர்: திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா தொடங்கியது
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் நேற்று தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் தொடங்கினர். விழாவையொட்டி நேற்று அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர், சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானை அம்மனுடன் யாகசாலையில் எழுந்தருளினார்.
கோயில் தக்கார் ரா.அருள்முருகன், இணை ஆணையர் க.ராமு ஆகியோரிடம் காப்பு கட்டிய சோமாஸ் கந்தர் பட்டர் தாம்பூலம் பெற்று, யாகசாலை பூஜையை தொடங்கினார். பின்னர், விக்னேஸ்வர பூஜை, கும்ப பூஜை, ஹோம பூஜைகள் நடைபெற்றன.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

