தீபாவளி 2025: செல்வம் பெருக லட்சுமி குபேர பூஜைக்கான உகந்த நேரம்

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது மகாலட்சுமி மற்றும் குபேரரை வழிபடுவதற்கான சுப நேரத்தை ஜோதிடர் ராமராமானுஜ தாசன் தெரிவித்துள்ளார்.

 

தீபாவளி நாளில் அதிகாலை எண்ணெய் தேய்த்து குளிப்பது கங்கா ஸ்நானம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில், எண்ணெயில் லட்சுமியும், நீரில் கங்கையும் வாசம் செய்வதாக நம்பப்படுகிறது. மேலும், இது நரக சதுர்த்தசி என்றும் அழைக்கப்படுகிறது.

 

இந்த ஆண்டு தீபாவளி தினத்தில் மாலை வேளையில் அமாவாசை திதி வருகிறது. எனவே, அன்று மாலை நேரத்தில் மகாலட்சுமியையும், செல்வத்தின் அதிபதியான குபேரனையும் பூஜிப்பது சிறப்பானது. குடும்பத்துடன் புத்தாடைகள் மற்றும் ஆபரணங்கள் அணிந்து வழிபடுவதால் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

 

 தீபாவளி அன்று மாலை 3.45 மணி முதல் இரவு 7 மணிக்குள் தீபாவளி பூஜை மற்றும் குபேர பூஜையை செய்வது உத்தமம். அமாவாசை திதி அன்று மாலை 3.45 மணிக்கு தொடங்கி மறுநாள் (21.10.2025) மாலை 5.48 மணி வரை நீடிக்கிறது. மறுநாள் கேதார கௌரி விரதமும் கடைப்பிடிக்கலாம்.


Edited by Mahendran

 

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.