பழனி திருக்கார்த்திகை தீபத்திருவிழா: நவ. 27-ல் தொடக்கம்! டிச. 3-ல் முக்கிய நிகழ்வு

முருகப்பெருமானின் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் இந்த ஆண்டுக்கான திருக்கார்த்திகை தீபத்திருவிழா குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

இந்த திருவிழா வரும் நவம்பர் 27-ஆம் தேதி மாலை சாயரட்சை பூஜையின்போது காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. திருவிழா நாட்களில் தினமும் மாலை 6:30 மணிக்கு சண்முகார்ச்சனை நடைபெறும்.

 

விழாவின் முக்கிய நிகழ்வுகள்:

 

பரணி தீபம்: டிசம்பர் 2-ஆம் தேதி மலைக்கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படும்.

 

திருக்கார்த்திகை தீபம்: டிசம்பர் 3-ஆம் தேதி திருக்கார்த்திகை தினத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு விசேஷ பூஜைகள் நடைபெறும்.

 

அன்று மாலை 4:45 மணிக்குச் சின்னக்குமாரர் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி, மலைக்கோவிலின் நான்கு மூலைகளிலும் தீபம் ஏற்றப்படும்.

 

சரியாக மாலை 6 மணிக்குத் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு, சொக்கப்பனை கொளுத்தப்படும்.

 

பழனியின் உபகோவில்களிலும் திருக்கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வுகள் நடைபெறும். விழா ஏற்பாடுகளை தேவஸ்தான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

 

Edited by Mahendran

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.