BB Tamil 9: கடலோடி புள்ள தான நீ? அப்புறம் ஏன் நீ இப்படி இருக்க? - சுபிக்ஷாவின் அப்பா அட்வைஸ்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 81 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர்.

இந்த வாரத்திற்கான வீட்டுத் தலைவராக கம்ருதீன் செயல்படுகிறார்.

பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் (ஃபேமிலி ரவுண்ட்) டாஸ்க் நடக்கிறது.

அந்த வகையில் இதுவரை வினோத், சபரி, கனி, அமித், திவ்யா, பார்வதி, கம்ருதீன், அரோரா, விக்ரம் ஆகியோரின் குடும்பத்தினர் வந்துவிட்டனர்.

BB Tamil 9

இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரொமோவில் சுபிக்ஷாவின் குடும்பத்தினர் வந்திருக்கின்றனர். "பீட் பாக்ஸை இதோட நிப்பாட்டு. நல்லாவே இல்ல, அதை பண்ணாத.

பாரு, சாண்ட்ராவை நம்பாத. யாரை நீ ரொம்ப நம்புறியோ அவங்கதான் உனக்குக் கெடுதல் நினைப்பாங்க.

விக்ரம்கிட்ட நீ எப்படி இருக்கியோ அதே மாதிரி வினோத் அண்ணா, கம்ருதீன் கிட்டயும் இரு.

பாருவை எப்படி எதிர்த்து பேசுனியோ அதே மாதிரி பேசு. நீ ரொம்ப பயந்தவ மாதிரி இருக்க" என்று சுபிக்ஷாவின் தம்பி அட்வைஸ் கொடுக்கிறார்.

BB Tamil 9
BB Tamil 9

"உன்னைய பத்தி யாராச்சும் பேசுனா. அவங்களை எதிர்த்து பேசு. கடலோடி புள்ள தான நீ? அப்புறம் ஏன் நீ இப்படி இருக்க.

சிங்கப்பெண்ணுங்கிற பேரு இந்த வீட்டில உனக்கு இல்லையேமா?" என சுபிக்ஷவின் அப்பாவும் அவருக்கு அட்வைஸ் செய்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.