WBBL தொடரில் இருந்து திடீரென விலகிய ஜெமிமா.. ஸ்மிருதி மந்தனா காரணமா?

 

பிக் பாஷ் லீக் தொடரின் எஞ்சிய ஆட்டங்களில் இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் பங்கேற்க மாட்டார் என பிரிஸ்பேன் ஹீட் அணி உறுதி செய்துள்ளது.

 

ஜெமிமா ரோட்ரிக்ஸ், 10 நாட்களுக்கு முன்பு ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்திற்கு பிறகு, ஸ்மிருதி மந்தனாவின் திருமண விழாக்களில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு திரும்பினார். ஆனால், மந்தனாவின் தந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் திருமணம் ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து, ஜெமிமா, மந்தனாவின் குடும்பத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக இந்தியாவில் தங்க முடிவு செய்தார். இந்த முடிவை முழுமையாக மதிப்பதாக பிரிஸ்பேன் ஹீட் அணி தெரிவித்துள்ளது.

 

பிரிஸ்பேன் ஹீட் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி டெர்ரி ஸ்வென்சன் இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், "இது ஜெமிமாவிற்கு சவாலான காலமாக அமைந்துள்ளது. எனவே, அவர் WBBL தொடரில் பங்கேற்கவில்லை என்றாலும், அவர் இந்தியாவில் தங்க வேண்டும் என்ற அவரது கோரிக்கையை நாங்கள் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டோம். ஜெமிமாவுக்கும், ஸ்மிருதி மந்தனாவின் குடும்பத்திற்கும் பிரிஸ்பேன் ஹீட் அணியின் சார்பில் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்," என்று கூறினார்.

 

ஜெமிமா தனது சூழ்நிலையைப் புரிந்துகொண்டதற்காக அணிக்கும் ரசிகர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டதோடு, எஞ்சியுள்ள ஆட்டங்களுக்கு வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் என்றும் ஸ்வென்சன் குறிப்பிட்டார்.

 

 

Edited by Siva

 

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.