விராத் கோலி அபார சதம்.. ரோஹித் சர்மா அரைசதம்.. 300ஐ தாண்டிய இந்தியாவின் ஸ்கோர்..!

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையே இன்று நடைபெற்று வரும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 300 ரன்களை தாண்டி அபாரமான ஸ்கோரை எட்டியுள்ளது.

 

இந்திய அணியின் சீனியர் பேட்ஸ்மேனான விராட் கோலி 120 பந்துகளில் 135 ரன்கள் எடுத்தார். இதில் ஏழு சிக்ஸர்கள் மற்றும் 11 பவுண்டரிகள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இன்னொரு சீனியர் வீரரான ரோஹித் ஷர்மா மூன்று சிக்ஸர்கள் மற்றும் ஐந்து பவுண்டரிகளுடன் 57 ரன்கள் அடித்துள்ளார்.

 

இந்திய அணி 45 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 301 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் தொடரை இழந்த இந்தியா, ஒருநாள் தொடரை வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

Edited by Siva

 

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.