பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை அனுப்பலாமா? பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு..!

cricket ground

பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெற உள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவது குறித்து, கிரிக்கெட் ஆஸ்திரேலியா தற்போது ஆய்வு நடத்தி வருகிறது.

 

பாதுகாப்பு அம்சங்களை முழுமையாக ஆய்வு செய்வதற்காக, பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் CA அதிகாரிகளைக் கொண்ட ஒரு குழுவை ஆஸ்திரேலியா அமைத்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் ஆலோசித்து வரும் இந்த குழு, லாகூரில் உள்ள கடாபி மைதானம், எல்சிசிஏ மைதானம் மற்றும் வீரர்கள் தங்குமிடங்கள் ஆகியவற்றில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து வருகிறது.

 

சமீபத்தில் இலங்கை அணி பாகிஸ்தானில் விளையாடிய போது மைதானம் அருகே நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய நிலையில், இந்த ஆய்வு முக்கியத்துவம் பெறுகிறது. 

 

இந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையிலேயே ஆஸ்திரேலிய அணியின் சுற்றுப்பயணம் உறுதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

 

Edited by Siva

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.