இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா தோல்வி.. வரலாறு படைத்த தென்னாப்பிரிக்கா..!
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி சண்டிகர் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் குவிண்டன் டி காக் 90 ரன்கள் அதிரடியாக அடித்தார்.
இதனை அடுத்து, 214 என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடிய நிலையில், சுப்மன் கில் ரன் ஏதும் எடுக்காமலும், அபிஷேக் ஷர்மா 17 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர், திலக் வர்மா ஓரளவு தாக்குப்பிடித்து 62 ரன்கள் எடுத்தாலும், 19.2 ஓவர்களில் 162 ரன்களுக்கு இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து, தென்னாப்பிரிக்க அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சண்டிகர் மைதானத்தில் நேற்று நடந்த போட்டிதான் முதல் டி20 போட்டி என்பதும், இந்த போட்டியில் 213 ரன்கள் குவித்து, தென்னாப்பிரிக்கா அணி அந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சிறப்பை பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Edited by Siva
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


