மெஸ்ஸியை சந்திக்க தேனிலவை ரத்து செய்த புது மண தம்பதி: 15 வருடங்களாக தீவிர ரசிகை..!
அர்ஜென்டீன கால்பந்து அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி இன்று அதிகாலையில் கொல்கத்தா வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. உலகின் சிறந்த வீரரை காண கொல்கத்தாவின் சால்ட் லேக் மைதானத்தில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
மெஸ்ஸியின் வருகையை முன்னிட்டு, ஒரு தீவிர ரசிகர் தம்பதி தங்கள் தேனிலவு திட்டத்தை ரத்து செய்துவிட்டு கொல்கத்தாவுக்கு வந்துள்ளனர். "கடந்த வெள்ளிக்கிழமைதான் எங்களுக்கு திருமணம் ஆனது; ஆனால், மெஸ்ஸியை பார்ப்பதற்காக தேனிலவை ரத்து செய்துவிட்டோம்," என்று அந்த பெண் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 2010 முதல் மெஸ்ஸியின் தீவிர ரசிகர்களாக இந்த தம்பதி உள்ளனர்.
கொல்கத்தாவில் மெஸ்ஸி விளம்பரதாரர்களைச் சந்திப்பதுடன், மோகன் பகான் ஆல் ஸ்டார் அணிக்கும் டையமண்ட் ஆர்பர் ஆல் ஸ்டார் அணிக்கும் இடையேயான போட்டியின் நிகழ்வுகளில் கலந்துகொள்கிறார். கொல்கத்தாவை தொடர்ந்து ஹைதராபாத், மும்பை, டெல்லி ஆகிய இடங்களுக்கும் அவர் செல்ல திட்டமிட்டுள்ளார்.
Edited by Mahendran
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


