தொடர்ந்து மோசமான பார்மில் சுப்மன் கில்.. மோசமான சாதனை படைத்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

 

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவராக இருக்கும் சுப்மன் கில், கடந்த சில போட்டிகளில் தனது திறமையை நிரூபிக்காததால் அவர் மீது விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

 

சஞ்சு சாம்சன் போன்ற திறமையான வீரர்களை களமிறக்காமல், தொடர்ந்து மோசமாக ஃபார்ம் செய்து வரும் சுப்மன் கில்லுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கொடுக்கப்படுவதை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

 

இந்த நிலையில், சர்வதேச டி20 போட்டிகளில் தொடர்ந்து 17 இன்னிங்ஸ்களில் அரை சதம் அடிக்காத இந்திய ஓப்பனிங் பேட்ஸ்மேன் என்ற மோசமான சாதனையை கில் பெற்றுள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

 

இதற்கு முன் அஜிங்கியா ரஹானே, இஷான் கிஷன் ஆகியோர் 11 முறை அரை சதம் அடிக்காமல் இருந்தனர். ஷிகர் தவான் 14 முறையும், கௌதம் கம்பீர் 12 முறையும் அரை சதம் கூட அடிக்காமல் அவுட் ஆகி இருந்தனர்.

 

ஆனால், இந்த சாதனைகளையெல்லாம் சுப்மன் கில் முந்தி, மோசமான சாதனைக்கு சொந்தக்காரர் என்ற பெயரை பெற்றுள்ளார். இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

 

Edited by Siva

 

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.