மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி..தொடரையும் வெல்லுமா?
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றன.
இந்த நிலையில், நேற்று தர்மசாலா மைதானத்தில் மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி வெறும் 117 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. கேப்டன் மார்க்ரம் மட்டுமே ஓரளவு நிலைத்து நின்று விளையாடி 61 ரன்கள் எடுத்தார்.
இந்திய தரப்பில் அர்ஷ்தீப் சிங்ம் ரானா, வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா, சிவம் துபே தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதனை அடுத்து, 118 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி இந்தியா களமிறங்க, 15.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அபிஷேக் சர்மா 35 ரன்களும், சுப்மன் கில் 28 ரன்களும் எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு அடித்தளமிட்டனர்.
Edited by Siva
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


