கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் உலக சாதனை.. அபிஷேக் ஷர்மா அசத்தல்..!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான நேற்று நடந்த மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய நட்சத்திர வீரர் அபிஷேக் சர்மா ஒரு புதிய உலக சாதனையை படைத்துள்ளார். ஒரு இன்னிங்ஸில் முதல் பந்தையே மூன்று முறை சிக்ஸர் அடித்த உலகின் முதல் வீரர் என்பதே அவரது சாதனையாகும்.

 

நேற்றைய தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 3வது டி20 போட்டியில் அவர் முதல் பந்தை எதிர்கொண்ட நிலையில், அந்த பந்தை தென்னாப்பிரிக்காவின் லுங்கி நிகிடி வீசினார். முதல் பந்தில் ஒரு சிக்ஸருடன் அவர் கணக்கை தொடங்கினார். இந்த ஆண்டில் அவர் ஒரு இன்னிங்ஸின் முதல் பந்தையே சிக்ஸர் அடித்தது என்பது இது மூன்றாவது முறையாகும்.

 

மூன்று முறை ஒரு போட்டியின் முதல் பந்தையே சிக்ஸர் அடித்த உலகின் ஒரே வீரர் என்ற பெருமையை அபிஷேக் ஷர்மா பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Edited by Siva

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.