இந்தியா - தென்னாப்பிரிக்கா 4வது டி20: சுப்மன் கில் வெளியே? அணியில் 3 மாற்றங்கள் நிகழ வாய்ப்பு!
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் நான்காவது போட்டி லக்னோவில் உள்ள எகானா மைதானத்தில் டிசம்பர் 17 அன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்திய அணி நிர்வாகம், மூன்று மாற்றங்களை செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
மோசமான ஃபார்மில் இருக்கும் துணை கேப்டன் சுப்மன் கில் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் பேட்டரான சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.
மேலும், மூன்றாவது டி20 போட்டியில் கட்டாய ஓய்வில் இருந்த ஆல்-ரவுண்டர் அக்ஷர் படேல் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரும் அணிக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுக்காக அர்ஷ்தீப் சிங் மற்றும் வருண் சக்கரவர்த்தி அல்லது குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா ஆகியோரில் இருவருக்கு ஓய்வு அளிக்கப்படலாம்.
கேப்டன் சூர்யகுமார் யாதவ், 2025-ல் குறைவான ரன்களே எடுத்திருப்பதால், இந்த போட்டியில் அவரிடமிருந்து ரசிகர்கள் பெரிய ஸ்கோரை எதிர்பார்க்கின்றனர்.
உத்தேச அணி: அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன் , திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் , அக்ஷர் படேல், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ஜிதேஷ் ஷர்மா, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா.
Edited by Siva
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


