மீண்டும் சிஎஸ்கே அணிக்கு திரும்புகிறாரா பதிரானா? ஐஎல்டி20 போட்டியில் அசத்தல் பவுலிங்..!

ஐபிஎல் மினி ஏலம் இன்று மதியம் துபாயில் நடைபெறவிருக்கும் நிலையில், முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் மதீஷா பதிரானா மீண்டும் தனது சிறந்த ஃபார்முக்குத் திரும்பி அசத்தியுள்ளார்.

 

இலங்கையை சேர்ந்த வேகப்பந்துவீச்சாளரான பதிரானா, கடந்த ஐபிஎல் சீசனில் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாகச் செயல்படாத காரணத்தினால், மினி ஏலத்திற்கு முன்னதாக சிஎஸ்கே அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

 

தற்போது அவர் துபாயில் நடைபெற்று வரும் ஐஎல்டி20 போட்டியில் விளையாடி வருகிறார். இதில், பவர் பிளேயில் பந்து வீசி மெய்டன் விக்கெட் ஓவர் வீசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இவரது இந்த அபாரமான பந்துவீச்சு, ஐபிஎல் ஏலத்தில் இவருக்கு அதிக வரவேற்பை பெற்றுத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஃபார்முக்குத் திரும்பியுள்ள பதிரானாவை, சிஎஸ்கே அணி நிர்வாகம் மீண்டும் ஏலத்தில் எடுக்க முயற்சிக்குமா என்ற எதிர்பார்ப்பு சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

 

Edited by Mahendran

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.