ஐபிஎல் ஏலத்தில் அதிர்ச்சி: விற்கப்படாத கான்வே, சர்ப்ராஸ், பிரித்வி ஷா

அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான மினிஏலம் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் இன்று  மதியம் தொடங்கியது. இந்த ஏலத்தில் மொத்தம் 369 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். ஏலத்திற்கு முன்பு அணிகளிடம் அதிகபட்சமாக கொல்கத்தா ரூ. 64.30 கோடியும், குறைந்தபட்சமாக மும்பை ரூ. 2.75 கோடியும் வைத்திருந்தன.

 

ஏலத்தின் ஆரம்பச் சுற்றிலேயே  சில முன்னணி வீரர்கள் விற்கப்படாமல் போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்தின் அதிரடி வீரர் டெவான் கான்வே (அடிப்படை விலை ரூ. 2 கோடி), இந்தியாவின் இளம் வீரர்களான சர்ப்ராஸ் கான் மற்றும் பிரித்வி ஷா (இருவரும் தலா ரூ. 75 லட்சம்) ஆகியோர் முதல் செட்டில் ஏலத்தில் எடுக்கப்படவில்லை.

 

இவர்களுடன் ஆஸ்திரேலியாவின் ஜேக் பிரேசர் மெக்கர்க்கும் விற்கப்படவில்லை. முதல் செட்டில் ஏலத்தில் எடுக்கப்பட்ட ஒரே முக்கிய வீரர், தென்னாப்பிரிக்காவின் டேவிட் மில்லர் மட்டுமே ஆவார். அவரை அவரது அடிப்படை விலையான ரூ. 2 கோடிக்கு டெல்லி அணி நிர்வாகம் ஏலத்தில் எடுத்தது. 

 

நட்சத்திர வீரர்கள் ஆரம்பத்திலேயே புறக்கணிக்கப்பட்டது ஏலத்தின் போக்கை மாற்றியுள்ளது

 

Edited by Mahendran

 

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.