விராட் கோலி-அனுஷ்கா சர்மா தம்பதிக்கு சாமியார் வழங்கிய அறிவுரை.. வைரல் காணொளி..!

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் நடிகை அனுஷ்கா சர்மா ஆகியோர் விருந்தாவனத்தில் உள்ள ஸ்ரீ ஹிட் ராதா கேலி குஞ்ச் ஆசிரமத்தில் பிரேமானந்த் ஜி மஹாராஜை சந்தித்து ஆசி பெற்றனர். இந்த சந்திப்பின் காணொலி இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

அப்போது, பிரேமானந்த் மஹாராஜ் இந்த தம்பதியிடம் தங்கள் பணியை "இறைவனுக்குச் செய்யும் சேவை" போல் கருத வேண்டும் என்றும், பணிவுடனும் தீவிரத்துடனும் செயல்பட வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.

 

இந்த ஆண்டில் கோலி மற்றும் அனுஷ்காவின் விருந்தாவன வருகை இது மூன்றாவது முறையாகும். மே மாதம் கோலி டெஸ்ட் ஓய்வு அறிவித்த பின்னரும், ஜனவரியில் குழந்தைகளுடனும் இவர்கள் ஆசி பெற்றனர்.

 

சமீபத்தில் தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடரை முடித்துவிட்டு இங்கிலாந்தில் இருந்த இந்த தம்பதி, தற்போது இந்தியா திரும்பியுள்ளனர். கோலி, டிசம்பர் 24 ஆம் தேதி தொடங்கும் விஜய் ஹசாரே டிராபி தொடரிலும், ஜனவரியில் நியூசிலாந்து ஒருநாள் தொடரிலும் விளையாட உள்ளார்.

 

Edited by Mahendran

 

 

 

 

View this post on Instagram

 

 

 

 

 

 

 

 

 

 

 

A post shared by Bhajan Marg Official (@bhajanmarg_official)

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.