18 கோடி ரூபாய்க்கு மதீஷா பதிரானா ஏலம்.. ஏலம் எடுத்த அணி எது?

ஐபிஎல் 2026 மினி ஏலம் இன்று அபுதாபியில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை அணியின் வேக பந்துவீச்சாளர் மதீஷா பதிரானாவை ஏலத்தில் எடுப்பதில் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.

 

முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரரான பதிரானாவை வாங்க, ஆரம்பத்தில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் ஆர்வம் காட்டின. டெல்லி விலகிய பிறகு, லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டது.

 

இறுதியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, கடும் போட்டிக்கு பிறகு, மதீஷா பதிரானாவை ரூ. 18 கோடி என்ற பெரிய தொகைக்கு ஏலத்தில் எடுத்து தனது அணியில் இணைத்துக் கொண்டது. 

 

அனைத்து ஐபிஎல் அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்குவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றன.

 

Edited by Mahendran

 

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.