நேற்று 25 கோடி ரூபாய் சம்பாதித்த ஹீரோ.. இன்று ஜீரோ.. கேமரூன் க்ரீன் பரிதாபம்..!

ஐபிஎல் ஏலத்தில் கோடிகளை குவித்த கையோடு, ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீன் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்துள்ளார்.

 

அபுதாபியில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில், ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீனை 25.20 கோடி ரூபாய் என்ற மலைக்கவைக்கும் தொகைக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியது. இதனால் கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்த அவர், அடுத்த நாளே அடிலெய்டில் தொடங்கிய இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஆஷஸ் டெஸ்டில் விளையாடினார்.

 

நேற்றைய ஏலத்தின் உற்சாகத்தில் பெரிய ஸ்கோர் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய பந்தில் எதிர்கொண்ட இரண்டாவது பந்திலேயே கேட்ச் கொடுத்து ரன் ஏதுமின்றி வெளியேறினார். ஆஸ்திரேலிய அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், கிரீனின் இந்த டக் அவுட் அந்த அணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது.

 

இருப்பினும், ஸ்டீவ் ஸ்மித்திற்கு பதிலாகக் களமிறங்கிய அனுபவ வீரர் உஸ்மான் கவாஜா அரைசதம் அடித்து அணியை தாங்கிப் பிடித்தார். 

 

நேற்று ஐபிஎல் ஏலத்தில் "ஹீரோ"வாகப் பார்க்கப்பட்ட கேமரூன் கிரீன், இன்று ஆஷஸ் களத்தில் "ஜீரோ" ரன்னில் ஆட்டமிழந்தது சமூக வலைதளங்களில் விவாதமாகியுள்ளது.

 

Edited by Mahendran

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.