மினி ஏலத்தில் சிஎஸ்கே மிஸ் செய்த 5 பிரபல வீரர்கள்.. சோகத்துடன் ஒரு பதிவு..

துபாயில் நடைபெற்ற 2025 ஐபிஎல் மினி ஏலத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் குறிவைத்த வீரர்களின் பட்டியலை சுவாரஸ்யமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் மூலம் வெளியிட்டு அவர்களை ஏலம் எடுக்க முடியவில்லை என சோகத்துடன் தெரிவித்துள்ளது. ஏலத்திற்கு முன்பே சில குறிப்பிட்ட வீரர்களை வாங்குவோம் என்ற நம்பிக்கையில் அவர்களுக்காக தயார் செய்யப்பட்டிருந்த வெல்கம் போஸ்டர்களை அணி நிர்வாகம் தற்போது பகிர்ந்துள்ளது.

 

இந்த ஏலத்தில் பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மா, சர்பராஸ் கான் உள்ளிட்ட வீரர்களை சிஎஸ்கே வாங்கியுள்ளது. அதே சமயம், அணி நிர்வாகம் எடுக்க விரும்பியும் மற்ற அணிகளுடனான போட்டி காரணமாக கைநழுவிப்போன வீரர்களின் விவரங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. 

 

குறிப்பாக மதீஷா பத்திரனா, ரச்சின் ரவீந்திரா, கேமரூன் கிரீன், வெங்கடேஷ் ஐயர் மற்றும் லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோரை மீண்டும் மஞ்சள் சீருடையில் கொண்டு வர சிஎஸ்கே திட்டமிட்டிருந்தது.

 

"இனிமேல் இவற்றை எங்களால் பயன்படுத்த முடியாது" என குறிப்பிட்டு, அந்த வீரர்களுக்காக ஏற்கனவே எடிட் செய்யப்பட்டிருந்த வீடியோக்களை சிஎஸ்கே வெளியிட்டது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

 

Edited by Mahendran

 

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.