இந்தியா - தென்னாப்பிரிக்கா 4வது போட்டி ரத்து.. 5வது போட்டியில் இருந்து சுப்மன் கில் விலகல்..!
இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்க அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 கிரிக்கெட் போட்டி, லக்னோவில் நிலவிய அடர் மூடுபனி மற்றும் மோசமான காற்றின் தரம் காரணமாக ரத்து செய்யப்பட்டது.
ஐந்து போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தற்போது முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னணி வீரர் சுப்மன் கில் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். ஏற்கனவே கழுத்து வலியிலிருந்து மீண்டு வந்த அவர், தற்போது பயிற்சியின் போது கால் பெருவிரலில் காயமடைந்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையை மனதில் வைத்து, அவருக்கு ஓய்வளிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதனால் 5வது போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது.
5வது போட்டியில் கில்லுக்கு பதிலாக யாரை களமிறக்குவது என்பது குறித்து இந்திய நிர்வாகம் ஆலோசனை நடத்தி வருகிறது. தொடரை இந்தியா கைப்பற்றுமா அல்லது தென் ஆப்ரிக்கா சமன் செய்யுமா என்ற ஆவல் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
Edited by Mahendran
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


