இந்தியா - தென்னாப்பிரிக்கா 4-வது டி20 போட்டி ரத்து.. ரசிகர்களுக்கு டிக்கெட் ரீபண்ட் கிடையாதா?

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான 4-வது டி20 போட்டி லக்னோவில் கடும் மூடுபனி காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இதனால் ஏமாற்றமடைந்த ரசிகர்களுக்கு டிக்கெட் கட்டணத்தை திருப்பி அளிப்பது குறித்து பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா முக்கிய விளக்கம் அளித்துள்ளார். 

 

டிக்கெட் விற்பனை மற்றும் அது தொடர்பான நடைமுறைகள் அனைத்தும் அந்தந்த மாநில கிரிக்கெட் சங்கங்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால், கட்டணத்தை ரீஃபண்ட் செய்யும் முழு அதிகாரம் உத்தர பிரதேச கிரிக்கெட் சங்கத்திற்கே உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

பிசிசிஐ விதிகளின்படி, போட்டி தொடங்குவதற்கு முன்பே ரத்து செய்யப்பட்டால், ரசிகர்கள் கட்டணத்தை திரும்ப பெற தகுதியுடையவர்கள். இதனால் ரசிகர்களுக்கு ரீபண்ட் பணம் கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

 

வட இந்தியாவில் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நிலவும் மூடுபனி ஒரு சவாலான விஷயம் என்றாலும், இந்த முறை முன்கூட்டியே இத்தகைய வானிலை நிலவியது எதிர்பாராத ஒன்று என சைகியா விளக்கினார். 

 

இந்த ஆட்டம் கைவிடப்பட்டதால், இந்தியா 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் இறுதி போட்டி அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது.

 

Edited by Mahendran

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.