ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர்.. 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு..!

2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. 

 

நட்சத்திர பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும், ஆல்-ரவுண்டர் அக்‌ஷர் படேல் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அணியில் ஃபார்மில் இல்லாத ஷுப்மன் கில் நீக்கப்பட்டு, அதிரடி ஆட்டக்காரர் இஷான் கிஷன் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

 

அணியில் அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ஹார்திக் பாண்டியா, ஷிவம் துபே, ரிங்கு சிங் ஆகிய பேட்ஸ்மேன்களும், ஜஸ்ப்ரீத் பும்ரா,  குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய பவுலர்களும் இணைந்துள்ளனர். 

 

உலகக் கோப்பைக்கு முன்பாக நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலும் இதே அணியே விளையாடும். இப்போட்டிகள் பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை நடைபெற உள்ளன.

 

இந்திய அணி விவரம்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அக்‌ஷர் படேல் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ஹார்திக் பாண்டியா, ஷிவம் துபே, ரிங்கு சிங், ஜஸ்ப்ரீத் பும்ரா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், இஷான் கிஷன்.

 

Edited by Mahendran

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.