சென்னை அணியை வாங்கிய ஐசரி கணேஷ்.. வேல்ஸ் சென்னை கிங்ஸ் என பெயர் மாற்றம்..!
செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் எனப்படும் திரை நட்சத்திரங்களுக்கிடையேயான கிரிக்கெட் தொடர், ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதில் சென்னை ரைனோஸ், மும்பை ஹீரோஸ், கர்நாடகா புல்டோசர்ஸ், தெலுங்கு வாரியர்ஸ் மற்றும் பஞ்சாப் ஷேர்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்று வருகின்றன.
சென்னை அணியில் விஷ்ணு விஷால், ஜீவா, மிர்ச்சி சிவா, சாந்தனு, விக்ராந்த், பரத், பிருதிவி, அசோக் செல்வன், கலையரசன், ஆதவ் கண்ணதாசன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், சென்னை அணியை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மற்றும் நடிகை ஸ்ரீபிரியா ஆகியோர் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த அணியின் பெயர் இனி வேல்ஸ் சென்னை கிங்ஸ் என மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நிகழ்ச்சியில் நடிகர் ஆர்யா உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
வரும் 2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கின் புதிய சீசன் தொடங்க உள்ளது. இதில் புதிய உரிமையாளர்கள் மற்றும் புதிய பெயருடன் வேல்ஸ் சென்னை கிங்ஸ் அணி களமிறங்க இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


