19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை.. பாகிஸ்தானிடம் இந்தியா படுதோல்வி
19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இந்த பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, இந்திய பந்துவீச்சை சிதறடித்து 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது.
பாகிஸ்தான் அணியின் சமீர் மின்ஹாஸ் அபாரமாக விளையாடி 172 ரன்கள் குவித்து அந்த அணியின் ஸ்கோர் உயர முக்கிய காரணமாக அமைந்தார். பின்னர் 348 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கிப் பதிலடி கொடுக்கத்தொடங்கிய இந்திய அணி, பாகிஸ்தானின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
இந்திய அணியின் தொடக்க வீரர் வைபவ் குர்யவன்ஷி 26 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். கடைசி நேரத்தில் தீபஸ் நிலைத்து நின்று ஆடி 36 ரன்கள் எடுத்த போதிலும், இந்திய அணி 156 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன் மூலம் 191 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி ஆசிய கோப்பையை தன்வசப்படுத்தியது.
Edited by Siva
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


