கேப்டன் சுப்மன் கில் நீக்கப்படுவார் என எதிர்பார்க்கவே இல்லை: முன்னாள் கிரிக்கெட் வீரர்
டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து துணை கேப்டன் சுப்மன் கில் நீக்கப்பட்டிருப்பது தனக்கு பெரும் அதிர்ச்சியை அளிப்பதாக முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். எனினும், அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழுவின் ஒட்டுமொத்த முடிவை பாராட்டியுள்ள அவர், இது ஒரு "அற்புதமான 15 பேர் கொண்ட அணி" என்று குறிப்பிட்டுள்ளார்.
டி20 போட்டிகளில் கில்லின் ஸ்டிரைக் ரேட் குறைவாக இருந்ததே இந்த நீக்கத்திற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. அவருக்கு பதிலாக அதிரடி ஆட்டக்காரர் இஷான் கிஷன் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார்.
உள்நாட்டு கிரிக்கெட்டில் இஷான் கிஷனின் சிறப்பான செயல்பாட்டை அங்கீகரித்து அவருக்கு வாய்ப்பளித்திருப்பதை ஸ்ரீகாந்த் வெகுவாக புகழ்ந்துள்ளார். மேலும், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்த அணியில் அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களின் வருகை பலம் சேர்க்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
கில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சிறந்த வீரர் என்றாலும், டி20 அணியில் வாய்ப்புக்காக அவர் காத்திருக்க வேண்டும் என ஸ்ரீகாந்த் சுட்டி காட்டியுள்ளார்.
Edited by Siva
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


