ஒரு கட்டத்தில் இனிமேல் கிரிக்கெட்டே வேண்டாம் என்று கூட தோன்றியது: ரோஹித் சர்மா
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, 2023 ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு கிரிக்கெட்டில் இருந்தே ஓய்வு பெற நினைத்ததாக உருக்கமாக தெரிவித்துள்ளார்.
அகமதாபாத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த அந்த போட்டியில் அடைந்த தோல்வி, தன்னை மனரீதியாக நிலைகுலைய செய்ததாக அவர் கூறினார்.
"கேப்டனாக அந்த உலகக்கோப்பைக்காக எனது முழு உழைப்பையும் கொடுத்திருந்தேன். தோல்விக்கு பிறகு என் உடலில் துளி கூட ஆற்றல் இல்லாதது போலவும், முற்றிலும் உடைந்து போனது போலவும் உணர்ந்தேன். ஒரு கட்டத்தில் இனிமேல் இந்த விளையாட்டே வேண்டாம் என்று கூடத் தோன்றியது," என்று ரோஹித் ஒரு நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டார்.
மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப அவருக்கு இரண்டு மாதங்கள் தேவைப்பட்டுள்ளன. இருப்பினும், கிரிக்கெட் மீதான காதலால் 2024 டி20 உலகக்கோப்பையை இலக்காக கொண்டு மீண்டும் களமிறங்கியதாக அவர் கூறினார். 38 வயதான ரோஹித், வரும் ஜனவரி 2026-ல் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் மீண்டும் விளையாட உள்ளார்.
Edited by Siva
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


