புதிய உலக சாதனையை படைத்த ஸ்மிருதி மந்தனா.. குவியும் வாழ்த்துக்கள்..!

 

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4,000 ரன்களை கடந்த முதல் இந்திய வீராங்கனை என்ற புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார்.

 

விசாகப்பட்டினத்தில் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற டி20 போட்டியின் போது, 25 ரன்கள் எடுத்திருந்த போது அவர் இந்த வரலாற்று மைல்கல்லை எட்டினார். மிகவும் வேகமான முறையில், அதாவது வெறும் 3,227 பந்துகளிலேயே 4,000 ரன்களை கடந்த வீராங்கனை என்ற பெருமையையும் மந்தனா பெற்றுள்ளார். 

 

சர்வதேச அளவில் மகளிர் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் நியூஸிலாந்தின் சுஸீ பேட்ஸ் 4,716 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். எனினும், இந்திய அளவில் இந்த இலக்கை எட்டிய முதல் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா என்பது குறிப்பிடத்தக்கது. 

 

அவரது இந்த அதிரடி ஆட்டம் மற்றும் சீரான செயல்பாடு இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Edited by Mahendran

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.