எனது சொந்த நாட்டிலேயே எனக்கு புல்லட் புரூப் தேவைப்படுகிறது.. ரஷித்கான் வருத்தம்.!
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரஷீத் கான், தனது சொந்த நாட்டில் நிலவும் பாதுகாப்பு சூழல் குறித்து பகிர்ந்துள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சனுடன் நடத்திய நேர்காணலில், ஆப்கானிஸ்தானில் தான் ஏன் குண்டு துளைக்காத காரை பயன்படுத்துகிறேன் என்பதை அவர் விளக்கினார்.
"சொந்த நாட்டில் என்னால் சாதாரணமாக சுற்றி திரிய முடியாது. எனக்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட புல்லட் புரூப் காரில் மட்டுமே நான் பயணம் செய்கிறேன்," என்று அவர் கூறினார். தரம் குறைந்த பாதுகாப்பு சூழல் காரணமாகவும், எதிர்பாராத அசம்பாவிதங்களை தவிர்க்கவும் இந்த முன்னெச்சரிக்கை அவசியம் என்று அவர் குறிப்பிட்டார். யாரும் தன்னை திட்டமிட்டு தாக்கப்போவதில்லை என்றாலும், தவறான நேரத்தில் தவறான இடத்தில் சிக்கிக்கொள்ளக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு என்று அவர் தெரிவித்தார்.
உலகின் டாப் டி20 பந்துவீச்சாளராகவும், ஐபிஎல் உள்ளிட்ட சர்வதேச லீக் தொடர்களின் நாயகனாகவும் ஜொலிக்கும் ரஷீத் கான், தனது பாதுகாப்பு காரணங்களுக்காக தற்போது துபாயை தனது இரண்டாவது இல்லமாக கொண்டுள்ளார். ஒரு உலகப்புகழ் பெற்ற வீரர் தனது சொந்த மண்ணிலேயே இத்தகைய சவால்களை எதிர்கொள்வது ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Mahendran
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


