ஐசிசி தரவரிசை.. முதல்முறையாக முதலிடத்தை பிடித்த இந்திய வீராங்கனை..!

 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள புதிய தரவரிசையில், இந்திய வீராங்கனை தீப்தி சர்மா டி20 பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதல் முறையாக முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். 

 

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 4 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்திய அவரது நேர்த்தியான பந்துவீச்சு, இந்த உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

 

தற்போது 737 ரேட்டிங் புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ள தீப்தி, ஆஸ்திரேலியாவின் அன்னாபெல் சதர்லேண்டை இரண்டாம் இடத்திற்குத் தள்ளியுள்ளார். தீப்தியை தொடர்ந்து பாகிஸ்தானின் சாதியா இக்பால் மற்றும் இங்கிலாந்தின் சோஃபி எக்கல்ஸ்டோன் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

 

மற்றொரு இந்தி வேகப்பந்து வீச்சாளர் அருந்ததி ரெட்டி 36-வது இடத்திற்கும், ஸ்ரீ சரணி 69வது இடத்திற்கும் முன்னேறியுள்ளனர். ஆல்ரவுண்டர் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் கலக்கி வரும் தீப்தி சர்மாவின் இந்த வரலாற்று சாதனை இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்குப் பெருமிதத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Edited by Mahendran

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.