இலங்கைக்கு எதிரான டி20 போட்டி.. இந்திய மகளிர் அணி அபார வெற்றி..!
இந்தியா மற்றும் இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஏற்கனவே முதல் போட்டியில் வெற்றி பெற்றிருந்த இந்தியா, நேற்றைய வெற்றியின் மூலம் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி, இந்திய வீராங்கனைகளின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 9 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
தொடர்ந்து 129 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. குறிப்பாக ஷபாலி வர்மா சிக்ஸர்களையும் பவுண்டரிகளையும் விளாசி, வெறும் 34 பந்துகளில் 69 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்டார்.
இதன் பலனாக இந்திய அணி 11.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டி வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய ஷபாலி வர்மாவிற்கு ஆட்ட நாயகி விருது வழங்கப்பட்டது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டி20 போட்டி வரும் டிசம்பர் 26-ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ளது.
Edited by Siva
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


