ரூ.7 கோடிக்கு வாங்கப்பட்ட வெங்கடேஷ் ஐயருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு இல்லையா? கும்ளே கருத்தால் சர்ச்சை

 

ஐபிஎல் 2026 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பிளேயிங் லெவனில் ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர் தொடக்கத்திலேயே இடம் பெறுவது கடினம் என்று இந்திய ஜாம்பவான் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். 

 

சமீபத்தில் நடைபெற்ற மினி ஏலத்தில் ரூ. 7 கோடிக்கு ஆர்சிபி அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்ட வெங்கடேஷ் ஐயர் குறித்த இந்த கருத்து ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

ஜியோஸ்டார் தளத்தில் பேசிய கும்ப்ளே, ஆர்சிபி ஏற்கனவே ஒரு வலுவான மற்றும் செட்டில் ஆன கட்டமைப்பை கொண்டுள்ளதாக குறிப்பிட்டார். கடந்த சீசனில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை மாற்றி, அணியின் சமநிலையை உடனடியாக குலைக்க நிர்வாகம் விரும்பாது என்பது அவரது கணிப்பு. "சாம்பியன் பட்டம் வென்ற அல்லது ஒரு நிலையான பார்மில் இருக்கும் அணியில் மாற்றங்களை செய்ய யாரும் அவசரப்பட மாட்டார்கள்; அந்த வகையில் வெங்கடேஷ் ஐயர் காத்திருக்க வேண்டியிருக்கும்" என்று அவர் விளக்கினார்.

 

இருப்பினும், வெங்கடேஷ் ஐயர் போன்ற திறமையான வீரர்கள் அணியில் இருப்பது ஆர்சிபிக்கு கூடுதல் பலம் என்றும், தொடரின் அடுத்தடுத்த கட்டங்களில் அவர் அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றுவார் என்றும் கும்ப்ளே நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

 

Edited by Mahendran

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.