3வது டி20 போட்டியிலும் இந்தியா வெற்றி.. தொடரை இழந்த இலங்கை வாஷ் அவுட் ஆகுமா?
இலங்கை அணிக்கு எதிரான மகளிர் டி20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி அபாரமாக கைப்பற்றியுள்ளது. ஏற்கனவே இரண்டு போட்டிகளில் வென்றிருந்த நிலையில், நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்ற மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை உறுதி செய்தது.
முதலில் பேட்டிங் செய்த இலங்கை மகளிர் அணி, இந்திய வீராங்கனைகளின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் மட்டுமே எடுத்தது.
113 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியில், தொடக்க வீராங்கனை சஃபாலி வர்மா அதிரடியாக விளையாடினார். அவர் 42 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 79 ரன்கள் குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
இந்திய அணி 13.2 ஓவர்களிலேயே 115 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை சாய்த்த ரேணுகா சிங் ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார். இரு அணிகளுக்கும் இடையிலான 4-வது போட்டி நாளை நடைபெற உள்ளது.
Edited by Mahendran
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


